என்னை விமர்சித்து சம்பாதித்தால் சந்தோஷம் – KPY பாலா பேட்டி !

மக்களுக்காக தொடர்ந்து நல்லது செய்வேன் என kpy பாலா தெரிவித்துள்ளார்.;

Update: 2025-09-21 08:25 GMT
கோவையில் நடைபெற்ற தனியார் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட KPY பாலா, என்னை விமர்சித்து சிலர் பணம் சம்பாதிக்கிறார்கள்; அவர்கள் சந்தோஷமாக இருந்தால் அதிலும் எனக்கு மகிழ்ச்சி. நான் யாரையும் ஏமாற்றி பணம் சம்பாதிப்பதில்லை. எத்தனை தடைகள் வந்தாலும் மக்களுக்காக நல்லது செய்வதைத் தொடர்வேன் என தெரிவித்துள்ளார். மேலும், ஒருவர் ‘நல்லது செய்யாதே, செட்டில் ஆகிவிடு’ என்று எச்சரித்தார். ஆனால், மக்களின் உறுதுணை எனக்கு போதுமானது. சமூக வலைதளங்களில் தவறாக பேசி சம்பாதிப்பவர்களைப் பற்றி எந்த புகாரும் அளிக்கமாட்டேன். நல்ல காரியம் செய்தால் யாரும் கவனிக்க மாட்டார்கள்; ஆனால் வீடியோவாக வெளியிட்டால் மட்டுமே கவனிக்கப்படுகிறது என்றார். அத்துடன், ‘காந்தி கண்ணாடி’ படத்துக்கு வழக்கு தொடரப்பட்டிருப்பதாகவும், அதற்கான காரணம் தமக்குத் தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

Similar News