பாப்பயம்பாடி ஊராட்சியில் பயணியர் நிழல் குடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை. MLA தலைமையில் நடைபெற்றது
பாப்பயம்பாடி ஊராட்சியில் பயணியர் நிழல் குடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை. MLA தலைமையில் நடைபெற்றது;
பாப்பயம்பாடி ஊராட்சியில் பயணியர் நிழல் குடை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை. MLA தலைமையில் நடைபெற்றது கரூர் மாவட்டம் , கடவூர்வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாப்பையம்பாடி ஊராட்சி , நால்ரோடு பகுதியில் பயணிகளின் வசதிக்காக நிழல் கூடை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி தலைமையில் நடைபெற்றது. ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்படும் இந்த பணிக்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது. பூமி பூஜையில் பங்கேற்று அதற்கான பணிகளை துவக்கி வைத்தார் எம்எல்ஏ சிவகாமசுந்தரி. இந்த நிகழ்ச்சியில் கடவூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ராமலிங்கம் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் , ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.