திருப்பத்தூர் அடுத்த நாயக்கணூர் பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த MP

திருப்பத்தூர் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்

Update: 2024-08-21 07:32 GMT
திருப்பத்தூர் மாவட்டம் இந்தியா அளவில் தமிழ் நாடு அதிமுக ஆட்சியில் 18 வாது இடத்தில் வளர்ச்சியில் பின்தங்கி இருந்த இடத்தை திமுக ஆட்சியில் 3 வாது இடம் பெற்று சாதனை படைத்துள்ளது என்று எம்பி பேச்சு! திருப்பத்தூரில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை வாக்களித்து வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆதியூர் தோரணபதி, சின்னாரம்பட்டி, நாயக்கனூர்,காக்கங்கரை, செவ்வாத்தூர், குனிச்சி, உள்ளிட்ட பகுதிகளில் பெருவாரியாக, வாக்களித்து வெற்றி பெற செய்த பொது மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சி. என். அண்ணாதுரை 2. லட்சத்து 35 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவிக்க நாயக்கனூர் வரும்பொழுது பெண்கள் உற்சாகமாக ஆரத்தி எடுத்து வரவேற்றனர் பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்து மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி உற்சாகமாக வரவேற்றனர் அப்போது சி.என்.அண்ணாதுரை பேசுகையில் கடந்த அதிமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு எந்த ஒரு அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வந்தனர் அதுமட்டுமின்றி இந்தியா அளவில் தமிழ்நாடு மிகவும் வளர்ச்சியில் பின்தங்கி 18 வாது இடத்தில் வகித்து இருந்தது கடந்த மூன்று ஆண்டு காலத்தில் திமுக பொற்கால ஆட்சிக்கு வந்தவுடன் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சாலை வசதி குடிநீர் வசதி. உள்ளிட்ட பல்வேறு எண்ணற்ற வசதிகள் செய்து இன்று தமிழ்நாடு 3 வாது இடத்தில் வளர்ச்சி அடைந்து உள்ளது எங்கள் ஆட்சியில் சொல்வதெல்லாம் செய்வோம் சொல்லாததும் செய்வோம் என்று ஆரவாரத்துடன் பேசினார் பின்னர் நாயக்கனூர் அரசு பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை வழங்கினார் இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் குணசேகரன் முன்னிலையில் கந்திலி சேர்மன் திருமதி திருமுருகன் ஊராட்சி மன்ற தலைவர் ஆசிரியர் எம் சண்முகம் மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் எஸ் முரளிதரன் ஒன்றிய ஊராட்சி கழக நிர்வாகிகள் கழக முன்னோடிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சியினர் திரளானோர் பங்கேற்றனர்

Similar News