கரூர்-பொய் வழக்கு எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும்? MR விஜயபாஸ்கர் கேள்வி.
கரூர்-பொய் வழக்கு எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும்? MR விஜயபாஸ்கர் கேள்வி.;
கரூர்-பொய் வழக்கு எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும்? MR விஜயபாஸ்கர் கேள்வி. கரூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கடந்த மாதம் எங்கள் கட்சியைச் சேர்ந்த ஒன்றிய தலைவர் மீது குண்டாஸ் சட்டத்தில் வழக்கு போட திட்டமிட்டு திமுகவினர் மிரட்டினார்கள். இப்போது அவர் திமுகவில் ஐக்கியமாகிவிட்டார். தொடர்ந்து இதுபோல பொய் வழக்கு போட்டு அதிமுக நிர்வாகிகளை திமுகவில் சேர்ப்பது, இல்லையென்றால் அவர்களை செயல்பட விடாமல் தடுப்பது போன்ற பணிகளை திமுக அரசின் கரூர் மாவட்ட நிர்வாகிகள் தொடர்ந்து இதுபோல செய்து வருகின்றனர். இது எவ்வளவு காலத்துக்கு நடக்கும் எனவும்,காலம் முழுவதும் இப்படியே நடத்தி விடலாம் என எண்ணுகிறார்களா ?எனவும், தவறாக மேற்கொள்ளப்படும் இதுபோன்ற செயல்கள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட வந்ததாக தெரிவித்தார்.