கரூர் மாணவனுக்கு NASA போட்டியில் சர்வதேச அங்கீகாரம். வாழ்த்து தெரிவித்த பள்ளி நிர்வாகம்.
கரூர் மாணவனுக்கு NASA போட்டியில் சர்வதேச அங்கீகாரம். வாழ்த்து தெரிவித்த பள்ளி நிர்வாகம்.;

கரூர் மாணவனுக்கு NASA போட்டியில் சர்வதேச அங்கீகாரம். வாழ்த்து தெரிவித்த பள்ளி நிர்வாகம். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவர் சரவதிஷ்.ஜி, 2024-2025 ஆம் ஆண்டிற்கான NASA - NSS Space Settlement Contest போட்டியில் தனது "Project Odyssey" என்ற தலைப்பில் சமர்ப்பித்த திட்டத்திற்காக International Honorable Mention விருதைப் பெற்றுள்ளார். இப்போட்டி உலகளவில் நடத்தப்படும் மிக முக்கியமான விஞ்ஞான மற்றும் ஆராய்ச்சி சார்ந்த போட்டிகளில் ஒன்றாகும். உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் இப்போட்டியில் சிறப்பு அங்கீகாரம் பெற்றது.ஒரு மிகப்பெரிய சாதனையாகும். சரவதிஷ் தனது ஆராய்ச்சி மனப்பான்மை, புதுமைமிகு சிந்தனை, மற்றும் விஞ்ஞான விழிப்புணர்வின் அடிப்படையில் தன்னுடைய திட்டத்தை வடிவமைத்துள்ளார். அவரது முயற்சி மாணவர்களுக்கு மிகச்சிறந்த முன்னுதாரணமாக விளங்குகிறது. பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவனுக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.