கோவை கார் குண்டு வழக்கில் NIA மீது கடும் குற்றச்சாட்டு: அனைத்து ஜமாத் கூட்டமைப்பு கண்டனம்!
கோவை, பத்திரிகையாளர் மன்றத்தில் , கோவை மாவட்ட அனைத்து ஜமாத் , இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சி கூட்டமைப்பு சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.;
கோவை, பத்திரிகையாளர் மன்றத்தில் , கோவை மாவட்ட அனைத்து ஜமாத் , இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சி கூட்டமைப்பு சார்பாக நேற்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுல்த்தான் அமீது பேட்டி அளித்தார். அப்போது இருப்பதாகவும் தெரிவித்தார். ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக பொய் சாட்சியம் சொல்ல வராததால் இருவரை தற்போது தேசிய புலனாய்வு முகமையினர் கைது செய்து இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இவர்களுக்கு உதவி செய்யப்படுபவர்கள் மிரட்டப்படுவதாகவும் , அப்பட்டமான மனித உரிமை மீறலில் தேசிய புலனாய்வு முகமை ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார். தேசிய புலனாய்வு அமைப்பின் செயல்பாடுகளை தமிழக அரசு கேள்வி கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அரபி பாடசாலைகள் தீவிரவாதிகளை உருவாக்கும் மையமாக செய்தி பரப்பப்படுகிறது எனவும், குண்டு வெடிப்பை நிகழ்த்திய முபின் அரபி பாடசாலையில் படித்தார் என்பதற்காக அங்கு படித்த அனைவருமே விசாரணைக்கு அழைக்கப்பட்டு உள்ளனர் எனவும் தெரிவித்தார். இஸ்லாமிய மார்க்கத்தை, மொழியை, நன்னடத்தையை சொல்லிக் கொடுக்கக் கூடிய அரபிக் கல்லூரிகளை மையப்படுத்தி, பயங்கரவாதிகளுக்கு பயிற்சி கொடுக்கப்படும் இடம் என முத்திரை குத்தப்படுகிறது, இதை கண்டிக்கிறோம் எனவும் தெரிவத்தார். தீவிரவாத முத்திரை குத்தப்படுவதால் ஓரே நாளில் அவர்களின் குடும்பம் நடுத்தெருவிற்கு வந்து விடுகின்றது எனவும் காஷ்மீர் போல பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றாக அமர்ந்து பேட்டி அளிக்கும் நிலைக்கு இஸ்லாமிய பெண்களை தேசிய புலனாய்வு முகமை உருவாக்கி இருக்கிறது எனவும் இதை தமிழக அரசியல் கட்சிகள் பேச வேண்டும் என தெரிவித்தார். இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் வெடி மருந்து, துப்பாக்கி போன்றவற்றுடன் கைது செய்தாலும் அதை தேசிய புலனாய்வு முகமை விசாரிப்பது இல்லை எனவும் தெரிவித்தார். இந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட முபின் ஏற்கனவே 2019 ல் இருந்து 2022 வரை தொடர்ச்சியாக NIA கண்காணிப்பில் இருந்தவர்தான் எனவும் , NIA அவர்களை முறையாக கண்காணிக்க தவறி விட்டதாகவும் தெரிவித்தார். NIA எதையும் புலனாய்வு செய்து கண்டுபிடிக்க வில்லை எனவும் அனைத்து தகவல்களையும் இஸ்லாமிய அமைப்புகள் தான் கொடுத்ததாக தெரிவித்த அவர்கள், 2019 முதல் NIA கண்காணப்பில் இருந்த முபின் எப்படி அவ்வளவு ? வெடிபொருட்களை சேர்க்க முடிந்தது எனவும் NIA என்ன கண்காணிப்பு வேலை செய்தது எனவும் தல்கா என்பவரை தவிர இந்த வழக்கில் தொடர்புடைய 17 பேரும் NIA வால் கண்காணிப்பில் இருந்தவர்கள் தான் எனவும் தெரிவித்தார். இஸ்லாமிய தீவிரவாதி என்று சொல்வது தவறு எனவும் தெரிவித்தார். இதனைதொடர்த்து இந்த கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு மற்றும் அரபிபாட சாலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் கண்ணீர் மல்க தேசிய புலனாய்வு அமைப்பினரின் செயல்பாடுகள் குறித்து பேட்டி அளித்தனர். 2.5 ஆண்டுகளுக்கு மேலாக விசாரணைக்கு ஒத்துழைத்தும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் துன்புறுத்தும் விதமாக செயல்படுவதாக குற்றம்சாட்டினர்.