மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு p
மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு;
ஆரணி அருகே அறுந்து கிடந்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து மூதாட்டி உயிரிழப்பு திருவள்ளூர் மாவட்டம் ஆரணி பேரூராட்சி அடுத்த சின்னம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளியான மூதாட்டி சூர்யா (70). இன்று காலை வழக்கம் போல மூதாட்டி வீட்டிலிருந்து பாத்திரங்களை கழுவுவதற்காக தண்ணீர் குழாய் அருகே சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து மூதாட்டி சூர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த ஆரணி காவல்துறையினர் மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஆரணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அறுந்து கிடந்த மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்து மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.