கோவை: POCSO வழக்கில் ரிஸ்வான் கைது !
போக்சோ வழக்கு குற்றவாளியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும்போது தப்பிச்சென்று மீண்டும் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.;
கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த ரிஸ்வான் (35) மீது 2021ஆம் ஆண்டு POCSO சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. வழக்கு விசாரணைக்காக நேற்று வந்த அவர் திடீரென தப்ப முயன்றார். போலீசாரை பிளேடை காட்டி மிரட்டி, 4 மணி நேரம் தப்பியிருந்தார். இதையடுத்து, பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. மகளிர் காவல் நிலைய போலீசார் நடத்திய 3 மணி நேர கண்காணிப்பின் பின், ரிஸ்வான் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 10 பிளேடுகள் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.