திருச்சி- கரூர் இடையே முன்பதிவு செய்யாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.PRO.

திருச்சி- கரூர் இடையே முன்பதிவு செய்யாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.PRO.

Update: 2024-12-26 11:20 GMT
திருச்சி- கரூர் இடையே முன்பதிவு செய்யாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.PRO. ஞாயிற்றுக்கிழமைகள் தவிர - வாரத்தில் 6 நாட்கள் - 01.01.2025 முதல் 31.03.2025 வரை முன்பதிவு செய்யப்படாத விரைவு ரயில்கள் திருச்சி-கரூர் வழித்தடத்தில் இயக்கப்படும். என கரூர் மாவட்டம் உள்ளடக்கிய சேலம் ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் மைக்கேல் மரியா தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அதிக எண்ணிக்கையிலான பயணிகளின் வசதிக்காக ரயில் எண்.06115 திருச்சிராப்பள்ளி சந்திப்பு - கரூர் சந்திப்பு இடையே முன்பதிவு செய்யப்படாத விரைவு ரயில் (வாரத்திற்கு 6 நாட்கள் - ஞாயிற்றுக்கிழமைகள் தவிர) 01.01.2025 முதல் 31.03.2025 வரை திருச்சிராப்பள்ளி சந்திப்பில் காலை 5:25 மணிக்கு புறப்படும் ரயில், கரூர் ரயில்வே ஜங்ஷனுக்கு காலை 07.20 மணிக்கு செல்லும். இதே போல,ரயில் எண்.06116 கரூர் சந்திப்பிலிருந்து- திருச்சிராப்பள்ளி சந்திப்புக்கு முன்பதிவு செய்யப்படாத விரைவு சிறப்பு ரயில் (வாரத்தில் 6 நாட்கள் - ஞாயிற்றுக்கிழமைகள் தவிர) 01.01.2025 முதல் 31.03.2025 வரை இரவு 08.05 மணிக்கு புறப்பட்டு, அதே நாளில் இரவு 10.50 மணிக்கு திருச்சிராப்பள்ளி சந்திப்பு நிலையத்தை அடையும். இந்த இரு ரயில்களும் திருச்சிராப்பள்ளி பாலக்கரை, திருச்சிராப்பள்ளி கோட்டை, பேட்டைவாய்தலை, குளித்தலை மற்றும் மகாதானபுரம்,கரூர் ரயில் நிலையங்களில் நின்று, பயணிகளை ஏற்றி இறக்கி செல்லும் என சேலம் கோட்ட ரயில்வே செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.

Similar News