வி. களத்தூர் SDPI கட்சியின் அரசியல் பயிலங்கம்
வர்த்தகர் அணியின் மாவட்ட தலைவர் முஹம்மது இக்பால், பஞ்சாயத்து கமிட்டி பொருளாளர் இப்ராஹிம், வி.களத்தூர் கிளை தலைவர் பக்கீர் முஹம்மது, மில்லத் நகர் கிளை செயலாளர் முஜீப் ரஹ்மான், கட்சியின் செயல்வீரர்கள் குதுப்தீன், இப்ராஹிம், ஹாஜா சரீப், தஸ்தகீர், முஹம்மது அலி ஆகியோர் கலந்து கொண்டனர்.;
பெரம்பலூர் மாவட்டம், வி. களத்தூர் SDPI கட்சியின் பஞ்சாயத்து கமிட்டி சார்பாக 'அரசியல் பயிலரங்கம்' நிகழ்ச்சி 19-07-25 அன்று மாலை 7.30 மணி அளவில் வி.களத்தூர் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது கமிட்டி தலைவர் இஸ்மாயில் வரவேற்புரை வழங்கி துவங்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் நூர் முஹம்மது அவர்கள் தலைமை தாங்கி நடத்தி வைத்தார்கள். இந்நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் மு. முஹம்மது பாரூக் 'இன்றைய அரசியல் சூழலும், புதிய சவால்களும்' என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார்கள். மேலும் வர்த்தகர் அணியின் மாவட்ட தலைவர் முஹம்மது இக்பால், பஞ்சாயத்து கமிட்டி பொருளாளர் இப்ராஹிம், வி.களத்தூர் கிளை தலைவர் பக்கீர் முஹம்மது, மில்லத் நகர் கிளை செயலாளர் முஜீப் ரஹ்மான், கட்சியின் செயல்வீரர்கள் குதுப்தீன், இப்ராஹிம், ஹாஜா சரீப், தஸ்தகீர், முஹம்மது அலி ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக கமிட்டி செயலாளர் முஹம்மது நன்றியுரை நிகழ்த்தினார்.