திண்டிவனத்தில் SIயை தாக்கிய வாலிபர் குண்டாசில் கைது

குண்டாசில் அடைக்கு ஆட்சியர் உத்தரவு;

Update: 2025-07-16 03:15 GMT
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மருத்துவமனை சாலையை சேர்ந்த ராஜி மகன் சரண்ராஜ், 35; ரவுடியான இவர், கடந்த மாதம் 14ம் தேதி, ரோஷனை முருகன் கோவில் பின்பகுதியில், போலி மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபட்டிருந்தார்.இது குறித்து தகவலறிந்த ரோஷனை சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, அவரை கைது செய்ய முயன்றனர். அப்போது, அவர் கத்தியால் சப் இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயன்றார். இதையடுத்து போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை திண்டிவனம் கிளைச்சிறையில் அடைத்தனர்.இவரது தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் விதமாக, விழுப்புரம் எஸ்.பி., சரவணன் பரிந்துரையின் பேரில், ரவுடி சரண்ராஜை குண்டாசில் கைது செய்ய கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேற்று உத்தரவிட்டார்.இதனையடுத்து, சரண்ராஜை ரோஷனை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News