கிருஷ்ணராயபுரம் அதிமுக கிழக்கு ஒன்றியம் சார்பில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) சிறப்பு பணி மற்றும் தேர்தல் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை நடைபெற்றது
குளித்தலை சட்டமன்ற தொகுதி, கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய அதிமுக சார்பில் கழக ஒன்றிய செயலாளர் இளங்குமரன் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மற்றும் பொதுவான தேர்தல் தொடர்பான பணிகளை பற்றி ஆலோசனை நடத்தினார்;
கிருஷ்ணராயபுரம் அதிமுக கிழக்கு ஒன்றியம் சார்பில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) சிறப்பு பணி மற்றும் தேர்தல் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை நடைபெற்றது கரூர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் போக்குவரத்துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆலோசனைப்படி குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்தில் ஒன்றிய கழக செயலாளர் இளங்குமரன் சிந்தலவாடி,பிள்ளாபாளையம், கள்ளப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் கழக நிர்வாகிகள்,பூத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர்களை சந்தித்து சிறப்பு தீவிர திருத்தம்,வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மற்றும் தேர்தல் தொடர்பான செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார் இந்நிகழ்வில் மாவட்ட பிரதிநிதிகள் கோமதிகண்ணன் மற்றும் செல்லத்துரை,மாவட்ட மாணவரணி இணை செயலாளர் பூமணி,மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் யோகபால்,அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் ராஜா,தகவல் தொழில் நுட்ப அணி பிரகாஷ்,பூத் கமிட்டி ஒருங்கிணைப்பாளர்கள் பாஸ்கர்,குமரவேல்,பாலசுப்பிரமணி, விஸ்வநாதன்,ஆறுமுகம் உட்பட ஏரளமான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்