கந்திலி அருகே லோன் தருவதாக பண மோசடி sp அலுவலகத்தில் புகார்

திருப்பத்தூர் அருகே மூன்று லட்சம் ரூபாய் லோன் தருவதாக ஆன்லைனில் பண மோசடி! பணத்தை மீட்டு தரக்கோரி எஸ்பி அலுவலகத்தில் புகார்.

Update: 2024-08-02 07:45 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே மூன்று லட்சம் ரூபாய் லோன் தருவதாக ஆன்லைனில் பண மோசடி! பணத்தை மீட்டு தரக்கோரி எஸ்பி அலுவலகத்தில் புகார். திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த பாரத கோவில் பகுதியை சேர்ந்த இர்ஃபான் இவரிடம் ஒரு தொலைபேசி எண் வந்துள்ளது அப்போது அதில் பேசியவர் தங்கள் தொலைபேசி எண்ணுக்கு மூன்று லட்ச ரூபாய் லோன் கொடுக்க உள்ளோம் எனக் கூறி தங்களுடைய ஆதார் மற்றும் பேன் கார்டு உள்ளிட்ட டாக்குமெண்ட்களை அனுப்புங்க என கூறியுள்ளார். இதனை நம்பிய இர்பான் அனைத்து ஆவணங்களையும் அனுப்பியுள்ளார் அதன் பின்பு மூன்று லட்ச ரூபாய் பணம் வேண்டும் என்றால் முதலில் பணம் செலுத்த வேண்டும் எனவும் டாக்குமெண்ட் சார்ஜ் கொடுக்க வேண்டும் எனக் கூறியும் சிறிது சிறிதாக 56 ஆயிரம் ரூபாயை அந்த தொலைபேசி எண்ணுக்கு அனுப்பி உள்ளார் இதனால் சிறிது நேரம் கழித்து அந்த தொலைபேசி எண் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை தாமதமாக அறிந்த இர்பான் ஆன்லைனில் மோசடி செய்த நபர் மீதும் அவரிடமிருந்து பணத்தை மீட்டு தரக்கோரியம் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News