மாணவன் தற்கொலை நடவடிக்கை எடுக்க S.P யிடம் புகார்

திண்டுக்கல் அருகே மாணவன் தற்கொலை - ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என S.P.-யிடம் புகார்;

Update: 2025-07-18 04:29 GMT
திண்டுக்கல், சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த சந்தியாகு மகன் சாம்ஜஸ்பர் இவர் வக்கம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஜூலை 14 தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அம்பாத்துரை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாணவனின் உறவினர்கள் மாவட்ட எஸ்பி.பிரதீப் அவர்களை சந்தித்து புகார் மனு அளித்தனர் அந்த மனுவில் எங்களுக்கு தாமதமாகவே உண்மை தெரியவந்தது பள்ளிக்குள் அலைபேசி பயன்படுத்தியது தொடர்பாக நடந்த விசாரணையில் எனது மகனை ஆசிரியர்கள் அடித்துள்ளனர். சக மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதால் மன உளைச்சல் ஏற்பட்டு தற்கொலை செய்துள்ளார். ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்திடம் உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

Similar News