குற்ற கலந்தாய்வு கூட்டம் sp தலைமையில் நடைபெற்றது

குற்ற கலந்தாய்வு கூட்டம் sp தலைமையில் நடைபெற்றது;

Update: 2025-09-10 10:07 GMT
திருப்பத்தூர் மாவட்டம் குற்ற கலந்தாய்வு கூட்டம் sp தலைமையில் நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி. தலைமையில் குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் காவல் நிலையங்களில் மற்றும் அலுவலகங்களில் எவ்வாறு கோப்புகளை பராமரிக்க வேண்டும், சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு, காவல்துறையினர் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி., காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். அதைத்தொடர்ந்து குற்ற வழக்கு தொடர்பு துறை துணை இயக்குனர் சிவகாமி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகள் மேலும் சில வழக்குகளை எவ்வாறு கையாள வேண்டும் என எடுத்துரைத்தார். இறுதியில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பண வெகுமதி வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News