கரூர்-மணல் கொள்ளை விவகாரத்தினால் தான் SP இடமாற்றம் செய்யப்பட்டார்-MR விஜயபாஸ்கர் பேட்டி.

கரூர்-மணல் கொள்ளை விவகாரத்தினால் தான் SP இடமாற்றம் செய்யப்பட்டார்-MRவிஜயபாஸ்கர் பேட்டி. N;

Update: 2025-07-16 08:35 GMT
கரூர்-மணல் கொள்ளை விவகாரத்தினால் தான் SP இடமாற்றம் செய்யப்பட்டார்-MR விஜயபாஸ்கர் பேட்டி. கரூர் மாவட்டம் வாங்கல் சுற்று வட்டார பகுதியில் காவிரி ஆற்றில் மணல் அல்ல நீதிமன்றம் தடை விதித்திருந்தும் மணல் கொள்ளை பட்டப் பகலிலேயே மிகஜோராக நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கடந்த மாதம் பகலில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட லாரி ஒன்றை பிடித்து வேலாயுதம் பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். ஆயினும் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் கண்டு கொள்ளாமல் இருந்து வந்தது. வாங்கல் பகுதியில் மணல் கடத்தும் குழுக்கள் இடையே எழுந்த மோதலில் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து மறுநாளே கரூர் மாவட்ட எஸ்பி இடமாற்றம் செய்யப்பட்டார். இன்று வாங்கல் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் மணல் கொள்ளை காரணமாக தான் எஸ் பி இடமாற்றம் செய்யப்பட்டார் என தெரிவித்தார்.

Similar News