குடகுனாறு பாலத்தில் வேகமாக சென்ற tata ace திடீரென பிரேக் இட்டதால் விபரீதம்.

குடகுனாறு பாலத்தில் வேகமாக சென்ற tata ace திடீரென பிரேக் இட்டதால் விபரீதம்.;

Update: 2025-07-20 09:01 GMT
குடகுனாறு பாலத்தில் வேகமாக சென்ற tata ace திடீரென பிரேக் இட்டதால் விபரீதம். கரூர் மாவட்டம் , அரவக்குறிச்சி தாலுகா , மலைக்கோவிலூர் அருகே பாரதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் வயது 53 . இவர் ஜூலை 18ஆம் தேதி இரவு 9 முக்கால் மணியளவில் திண்டுக்கல் - கரூர் சாலையில் டூவீலரில் சென்றார். அப்போது குடகனாறு பாலத்தில் செல்லும்போது தேனி மாவட்டம் , பழனிசெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த சரவணன் வயது 35 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டாட்டா ஏஸ் வாகனம் மோகன்ராஜ் - ஐ முந்தி சென்று திடீரென எவ்வித சிக்னலும் வெளிப்படுத்தாமல் பிரேக் இட்டதால் , மோகன்ராஜின் டூவீலர் டாட்டா ஏஸ் வாகனத்தின் பின்னால் மோதி தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த மோகன்ராஜின் மனைவி சித்ரா அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்த மோகனராஜன் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக விபத்து ஏற்படுத்திய சரவணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.

Similar News