கரூரில், UATT 2.0 திட்டத்தினை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.

கரூரில், UATT 2.0 திட்டத்தினை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.;

Update: 2025-11-20 09:06 GMT
கரூரில், UATT 2.0 திட்டத்தினை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு தோட்டக்கலை மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு உதவி தோட்டக்கலை அலுவலர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி அலுவலர்கள் நல சங்கத்தின் மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வி மற்றும் உதவி அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் அருள்செல்வன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாவட்ட அனைத்து தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் தோட்டக்கலை உதவி அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். கடந்த 1979 ஆம் ஆண்டு தோட்டக்கலை துறையின் வளர்ச்சி மற்றும் தனித்துவத்தை கருத்தில் கொண்டு தனித்துறையாக மாற்றப்பட்டது. பிறகு 2007 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களால் தோட்டக்கலைத் துறையில் மறு சீரமைப்பு செய்யப்பட்டது. இதனால் 100 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் தோட்டக்கலை பயிர்களில் இருந்து கிடைக்கும் உற்பத்தி மற்றும் வருமானம் 1000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் தானிய பயிர்களில் உற்பத்தி மற்றும் வருமானத்தை விட 20 முதல் 30 மடங்கு அதிகமாக வந்தது. ஐந்து முதல் 10 சென்ட் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் தோட்டக்கலை பயிர்களில் சாகுபடி தொழில் நுட்பங்களை தோட்டக்கலை பட்டய படிப்பு படித்த கள அலுவலர்களால் மட்டுமே வழங்க முடியும். இந்நிலையில் தோட்டக்கலைத் துறையில் தமிழக அரசின் வேளாண்மை உழவர் நல துறையால் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ள UATT 2.0 திட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே தோட்டக்கலை துறை வளர்ச்சியினை உறுதிப்படுத்த தமிழக அரசு UATT 2.0 திட்டத்தை கைவிட வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News