1லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்
பள்ளப்பட்டி அருகே ஒரு லட்சத்து 6 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் மற்றும் டூவீலர் பறிமுதல் செய்தனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பள்ளப்பட்டி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை நடமாட்டம் இருப்பதாக காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் நவம்பர் 26-ம் தேதி பள்ளப்பட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த பள்ளப்பட்டி, பட்டாணி தெருவை சேர்ந்த அரபு அலி வயது 37 என்பவரின் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்ட போது, அவரது வாகனத்தில் விமல் பாக்கு 50- பாக்கெட்டுகளும், ஏ1 பாக்கு 10 பாக்கெட்களும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் மொத்த எடை 4, 440- கிராம் எடையுள்ள இந்த பொருட்களின் மதிப்பு ரூபாய் 6000 என மதிப்பீடு செய்ததோடு, இந்த பொருட்களை விற்பனை செய்வதற்காக பயன்படுத்திய டூவீலரையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட டூவீலரின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சம் என மதிப்பீடு செய்த காவல்துறையினர், டூவீலருடன் புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்து,
இந்த செயலில் ஈடுபட்ட அரபு அலியை கைது செய்து,அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.