1 கிலோ முருங்கைக்காய் ரூ.20க்கு விற்பனை

ஆலங்குளத்தில் 1 கிலோ முருங்கைக்காய் ரூ.20க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Update: 2024-03-30 03:32 GMT

ஆலங்குளத்தில் 1 கிலோ முருங்கைக்காய் ரூ.20க்கு விற்பனையாவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் பிரதானமாக காய்கறி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தென்காசி, கடையம், ஆலங்குளம். பாவூர்சத்திரம். சுரண்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் முருங்கை சாகுபடியில் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது முருங்கை விளைச்சல் அமோக விளைச்சல் கண்டுள்ளதால் தினசரி மார்க்கெட்டில் ஒரு கிலோ முருங்கக்காய் தற்போது ரூ.20 க்கு விற்பனையாகிறது. உடனே தமிழக அரசு முருங்கை காய்க்கு உரிய விலை கிடைக்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். முருங்கைக்காய் நல்ல விளைச்சல் இருந்தும் விலை இல்லாததால் விவசாயிகள் கவலை தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News