வேளாண் பட்டதாரி தொழில் முனைவோருக்கு ரூ.1 லட்சம் மானியம்

Update: 2023-12-01 12:04 GMT

தொழில்முனைவோர் மானியம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டத்தில், வேளாண் தொழில் முனைவோராக விரும்பும் வேளாண் பட்டதாரிகளுக்கு ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட வேளாண் இணை இயக்குநர் சி.ஹரகுமார் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,  திருவண்ணாமலை மாவட்டத்தில், 2023- 24ம் ஆண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 175 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது. எனவே, இந்த கிராமங்களில் மாநில வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் மூலம் இளைஞர்களை வேளாண்மை தொழில் முனைவோராக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தில், கிராம இளைஞர்கள், வேளாண்மை,தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டம் பெற்ற 21 முதல் 40 வயதுக்கு உட்பட்ட அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியில் இல்லாத, கணிணி திறன் உள்ள பட்டதாரி கள் 5 நபர்கள் வேளாண் தொழில் முனைவோராக செயல்பட திருவண்ணாமலை மாவட்டத்துக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் வேளாண் தொழில் முனைவோராக தேர்வு செய்யப்படும் பட்டதாரி இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் 2 தவணைகளாக வழங்கப்படும். பிரதம மந்திரி யின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மற்றும் வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி திட்டம் அனுமதிக்கக் கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்கள் தொடங்கலாம். வேளாண்மை இடுபொருட்கள் விநியோகம், வேளாண் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்கள் உற்பத்தி செய்தல், உயிர் உரம் தயாரித்தல், நாற்றாங்கால் தோட்டம் அமைத்தல் மற்றும் வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்ப டும். பூச்சி மருந்து மற்றும் விதை விற்பனை நிலையங்கள் போன்ற வங்கிக் கடனுதவியுடன் துவங்கும் வேளாண் சார்ந்த தொழில் செய்யும் இளைஞர்களுக்கு இத்திட்டத்தில் பதிவு செய்யப்படும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் வேளாண் பட்டதாரி இளைஞர்கள் வலைதளத்தில், இளைஞர்களை தொழில் முனைவோராக்கும் திட்டத்தினை தேர்வு செய்து தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News