10 ஆயிரம் பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
மதுரை மேலூர் பால நாகம்மாள் கோவிலில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர்;
மதுரை மேலூர் செக்கடி அருகே உள்ள பால நாகம்மாள் கோவிலின் ஆடி உற்சவ விழாவின் முதல் நாளான இன்று (ஆக.12) காலையில் சக்தி கரகம் எடுத்தனர். அதனைத் தொடர்ந்து மேலூர் சுற்றுவட்டார பகுதி பெண்கள், சிறுவர்கள் உட்பட சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். மேலும், பலர் உடலில் அலகுகள் குத்தியும், பறவைக் காவடிகள் எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பால்குடம் எடுத்து மதியம் வரை பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.