100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சிலம்பம் ஆடியபடி பேரணியாக வந்த சிலம்ப மாணவ மாணவிகள்
100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி சிலம்பம் ஆடியபடி பேரணியாக வந்த சிலம்ப மாணவ மாணவிகள்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
திருச்செங்கோடு ஆதவன் சிலம்ப பயிற்சி பள்ளியின் சார்பாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தியும் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை என்பதை வலியுறுத்தும் விதமாகவும் சிலம்பம் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சிறுவர்கள் சிலம்பம் சுற்றிக்கொண்டே பேரணியாக வந்தனர், இந்த பேரணியை சிலம்ப பயிற்சியாளர் வெங்கடேசன் தொடங்கி வைத்தார்.
100% வாக்களிப்பு அவசியம் என்பது குறித்தும் வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பது குறித்தும் எடுத்துக் கூறும் விதமாக பதாகைகளை ஏந்தியபடி சிலம்பாட்ட மாணவ மாணவிகள் வந்தனர் வழியில் சிலம்பம் சுற்றியபடி வந்தும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கங்கள் எழுப்பியும் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர் கோழிகால் நத்தம் ரோடு பகுதியில் தொடங்கிய பேரணி,
பழைய சேலம் ரோடு, கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி, மேற்கு ரத வீதி வழியாக வந்து புதிய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் தனியார் திருமண மண்டபத்தை அடைந்தது இந்த பேரணியில் ஆதவன் சிலம்ப மாணவ மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர், இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அணி தலைவர் சுரேஷ்பாபு உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் கலந்து கொண்டனர்