100% மானியத்தில் வேப்பங்கன்றுகள் வினியோகம்!

வேளாண் செய்திகள்

Update: 2024-08-30 02:27 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விராலிமலை வட்டத்தில் முதலமைச்சரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தின்கீழ் 100 சதவீத வேப்பங்கன்றுகள் மானியத்தில் விநியோகம் செய்யப்படுவதாக வேளாண் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின்கீழ் விவசாயிக்கு அதிகபட்சமாக 5 ஏக்கருக்கு தேவையான வேப்பங்கன்றுகள் விநியோகிக்கப்படுகின்றன.வேப்பமர கன்றுகளை பிரதான பயிராக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 200 கன்றுகள் வீதம் 5 ஏக்கருக்கு 1000 மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. வேப்பமரகன்றுகளை வரப்பு பயிராக சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 60 கன்றுகள் வீதம் 5 ஏக்கருக்கு 300 கன்றுகள் விநியோகிக்கப்படுகிறது.எனவே, விராலிமலை வட்டம் சார்ந்த வேளாண் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி இத்திட்டத்தில் பயன் அடைந்திட விராலிமலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ப. மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Similar News