ஸ்ரீ அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி கோவில் தீர்த்தக்குட ஊர்வலத்தில் 5 ஆயிரம் பேர் பங்கேற்பு
எடப்பாடி ஒட்டப்பட்டியில் ஸ்ரீ அன்னை ஆனந்தாயி அங்காளபரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்...
சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டத்திற்குட்பட்ட ஒட்டப்பட்டி ஸ்ரீபரமானந்தம் சுவாமிகள் அருளாசியுடன் எழுந்தருளியுள்ள அன்னை ஆனந்தாயி அங்காள பரமேஸ்வரி ஆனந்த கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை நடைபெறவுள்ளதை முன்னிட்டு அதற்காக தீர்த்தக்குட ஊர்வலம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக பூலாம்பட்டி காவேரி ஆற்றுக்குச் சென்ற பக்தர்கள் புனித நீராடி தீர்த்தக்குடங்களை எடுத்துக்கொண்டு பம்பை மேல தாளங்கள் முழங்க எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட நாச்சிபாளையத்திலிருந்து ஒட்டப்பட்டி கோவில் வரை ஊர்வலமாக வந்தனர். இந்த தீர்த்தக்குட ஊர்வலத்தில் பெண்கள் குழந்தைகள் என ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று ஸ்ரீ அன்னை ஆனந்தாயி அங்காள பரமேஸ்வரி ஆனந்த கல்யாண சுந்தரேஷ்வரர் சுவாமியை வழிபட்டுச் சென்றனர்...