நாளை முதல் மூன்று நாட்களுக்கு வீடுகள் தோறும் கட்சி கொடி ஏற்ற வேண்டும்- எம்எல்ஏ மாணிக்கம் வேண்டுகோள்.

நாளை முதல் மூன்று நாட்களுக்கு வீடுகள் தோறும் கட்சி கொடி ஏற்ற வேண்டும்- எம்எல்ஏ மாணிக்கம் வேண்டுகோள்.

Update: 2024-09-14 10:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாளை முதல் மூன்று நாட்களுக்கு வீடுகள் தோறும் கட்சி கொடி ஏற்ற வேண்டும்- எம்எல்ஏ மாணிக்கம் வேண்டுகோள். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், தெற்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம், பஞ்சப்பட்டி, கலைஞர் திடல், கிழக்கு களத்தில் கிருஷ்ணாராபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர் கரிகாலன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சக்திவேல், மாவட்ட அவைத் தலைவர் ராஜேந்திரன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவி ராஜா, பொதுக்குழு உறுப்பினர் ஜாபருல்லா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம். நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக கிருஷ்ணராஜபுரம் தெற்கு ஒன்றிய பகுதியில் செயலாற்றிய, மறைந்த கட்சி நிர்வாகிகள் எட்டுக்கும் மேற்பட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசித்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து கட்சியினரிடையே பேசிய எம்எல்ஏ மாணிக்கம், 1949 ஆம் ஆண்டு திமுக கட்சி துவக்கப்பட்டு, இன்று 75 வது ஆண்டாக தொடர்ந்து தமிழக மக்களின் இதய சிம்மாசனத்தில் தொடர்ந்து வருகிறது. கட்சியின் தலைமை முடிவுப்படி, பவள விழா கொண்டாடுவதற்காக நாளை செப்டம்பர் 15 முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை கட்சி அலுவலகம், கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் இல்லம்தோறும் கட்சி கொடி ஏற்றி வைத்து பவள விழா ஆண்டை கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Similar News