இலங்கை நீதிமன்றம் முன்பு தூத்துக்குடி மீனவர்கள் போராட்டம்!

இலங்கை நீதிமன்றம் முன்பு தூத்துக்குடி மீனவர்கள் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-09-18 08:10 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி அருகே உள்ள தருவைகுளம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த அந்தோணி மகாராஜா மற்றும் தேன் தெனிலா என்ற விசைப்படகு உரிமையாளர்களுக்கு சொந்தமான இரண்டு விசைப்படைகுகளில் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக கூறி சிறை பிடித்து சென்று இலங்கைச் சிறையில் அடைத்தது இதில் அந்தோணி மகாராஜா என்பவரது படகில் சென்ற 12 மீனவர்களுக்கும் இலங்கை புத்தளம் நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 3ம் தேதி அத்துமீறி நுழைந்ததற்காகவும் இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடித்ததற்காகவும் சுமார் மூன்றரை கோடி ரூபாய் அபராதம் மற்றும் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்தது. இந்த அபராத விதிப்பு மற்றும் சிறை தண்டனையை கண்டித்து தருவைகுளம் மீனவ கிராம மக்கள் கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி மத்திய மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு இலங்கை சிறையில் வாடும் மீனவர்கள் மற்றும் விசைப்படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் மேலும் 10 மீனவர்களுக்கு எவ்வித அபராதமும் விதிக்காத வகையில் நீதிமன்றத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது இதை தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தை விளக்கி கொண்டனர் இந்நிலையில் இன்று தேன் தேனிலா என்பவரது படகில் சென்ற 10 மீனவர்களுக்கான வழக்கு விசாரணை புத்தளம் நீதிமன்றத்தில் வந்தது வழக்கு விசாரணை செய்த நீதிபதி 10 மீனவர்களுக்கும் ₹3.5 கோடி அபராதம் மற்றும் ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் இந்த தீர்ப்பு மீனவர்களை அதிர்ச்சி அடைய செய்ததை தொடர்ந்து இலங்கை நீதிமன்றத்திற்கு வெளியே நீதிமன்றத்திற்கு வந்த ஏழு மீனவர்கள் நீதிமன்றம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதன் காரணமாக அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது மேலும் இந்த தீர்ப்பு தருவைகுளம் மீனவ கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Similar News