பேரக்கம்பாளையம் பிரிவில் டூவீலரில் வேகமாக ஓட்டியதால் கட்டுப்பாட்டு இழந்து கீழே விழுந்து விபத்து ஒருவர் படுகாயம்.
பேரக்கம்பாளையம் பிரிவில் டூவீலரில் வேகமாக ஓட்டியதால் கட்டுப்பாட்டு இழந்து கீழே விழுந்து விபத்து ஒருவர் படுகாயம்.
பேரக்கம்பாளையம் பிரிவில் டூவீலரில் வேகமாக ஓட்டியதால் கட்டுப்பாட்டு இழந்து கீழே விழுந்து விபத்து ஒருவர் படுகாயம். கரூர் மாநகராட்சிக்குட்பட்ட நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன் வயது 36. இவர் தற்போது கோவை மாவட்டம், சரவணம்பட்டி, சாவித்திரி நகர் பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் செப்டம்பர் 16ஆம் தேதி மதியம் 1:30 மணி அளவில், கோவை - கரூர் சாலையில் அவரது டூவீலரில் வந்து கொண்டு இருந்தார். இவரது வாகனம் பேரக்கம்பாளையம் பிரிவு சாலை அருகே வந்தபோது, டூவீலரை வேகமாக இயக்கியதால், டூ வீலர் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஜனார்த்தனனை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள ராயல் கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த ஜனார்த்தனின் மனைவி கார்த்திகா வயது 24 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை, சாலை விதிகளை கடைபிடிக்காமல் வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஜனார்த்தனன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் தென்னிலை காவல்துறையினர்.