தேசிய அளவிலான மரவள்ளி கருத்தரங்கு மற்றும் உணவு திருவிழா குறித்து கூட்டம்
தேசிய அளவிலான மரவள்ளி கருத்தரங்கு மற்றும் உணவு திருவிழா குறித்து கூட்டம்
நாமக்கல் மாவட்டம் இராசிபுரத்தில், மத்திய-மாநில அரசு துறைகளில் சார்பில், வருகின்ற நவம்பர் மாதம் 4 மற்றும் 5-ம் தேதிகளில் நடைபெற உள்ள, தேசிய அளவிலான மரவள்ளி கருத்தரங்கு மற்றும் உணவு திருவிழாவில், விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்று, திருவனந்தபுரம் மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவன மூத்த விஞ்ஞானி Dr. து. ஜெகநாதன், கேட்டுக் கொண்டுள்ளார்*. நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், மத்திய அரசின் திருவனந்தபுரம் மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம்(CTCRI) மற்றும் தமிழ்நாடு அரசின் வேளாண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட அரசு துறைகள் சார்பில், தேசிய அளவிலான மரவள்ளி கருத்தரங்கம் மற்றும் உணவு திருவிழா நடத்துவது தொடர்பான, அரசு துறை அலுவலர்கள், விவசாயிகள், பங்குதாரர்கள் உடனான கலந்துரையாடல் மற்றும் முன்னோட்ட சந்திப்புக் கூட்டம் (STAKEHOLDERS INTERFACE CUM PRE-PROGRAM MEETING) நடைபெற்றது. மத்திய கிழக்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி, Dr. து. ஜெகநாதன் தலைமை வகித்தார். மூத்த விஞ்ஞானி Dr. இரா. முத்துராஜ் முன்னிலை வகித்தார். இந்தக் கலந்துரையாடல் மற்றும் ஆலோசனை கூட்டத்தில், வருகின்ற நவம்பர் மாதம் 4 மற்றும் 5-ம் தேதிகளில் நடத்தப்பட உள்ள தேசிய அளவிலான மரவள்ளி கருத்தரங்கம் மற்றும் உணவு திருவிழா குறித்து விவசாயிகள், அரசு துறை அலுவலர்கள் ஆகியோருடன், CTCRI விஞ்ஞானிகள் ஆலோசனைகளை கேட்டறிந்தனர். அப்போது, மத்திய அரசின் திருவனந்தபுரம் மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவன மூத்த விஞ்ஞானி டாக்டர் து. ஜெகநாதன் பேசும்போது, நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்த சேந்தமங்கலம் பிரிவு சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், வருகின்ற நவம்பர் மாதம் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான மரவள்ளி கருத்தரங்கு மற்றும் உணவு திருவிழா மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித் திட்டம் ஏத்தாப்பூர், வேளாண் அறிவியல் நிலையங்கள், தமிழ்நாடு வேளாண்மைத் துறை, தோட்டக்கலை துறை, விவசாய குழுக்கள் உள்ளிட்டோர் இணைந்து இந்த கண்காட்சி & கருத்தரங்கை நடத்துகிறோம். அனைத்து மரவள்ளி விவசாயிகள் மரவள்ளி பங்குதாரர்கள் பங்குபெற்று பயன்பெற வேண்டும். தொழில்நுட்ப உரைகள், கண்காட்சிகள், விவசாயிகளை கௌரவித்தல், உணவு திருவிழா போட்டிகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. எனவே அனைத்து விவசாய பெருமக்கள், பொதுமக்கள், இந்த தேசிய அளவிலான கருத்தரங்கில் கலந்துகொள்ள வேண்டும். இந்த தேசிய அளவிலான கருத்தரங்கம் நடத்துவதன் மூலம், தமிழ்நாட்டில் 80 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. நாமக்கல், சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, திருப்பூர் போன்ற பகுதிகளில் அதிக அளவில் மரவள்ளி பயிரிடப்படுகிறது. இந்தப் பயிரில் பருவநிலை, காலமாற்றத்தால் பூச்சி தாக்குதல், நோய் தாக்குதல்கள் குறைந்த மகசூல் ஆகிய பிரச்னைகள் காணப்படுகின்றன. எனவே, இந்த தேசிய அளவிலான கருத்தரங்கில் முன்னோடி விவசாயிகள், தொழில் முனைவோர், விவசாயிகள், சேகோ மற்றும் ஜவ்வரிசி தொழிற்சாலைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த, வேளாண் அதிகாரிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்துகொண்டு, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து தமிழ்நாட்டு விவசாயிகளுடன் பகிர்ந்து கொள்வார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில், சுமார் 60 கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு ICAR, தோட்டக்கலை, வேளாண்மை, வேளாண் அறிவியல் நிலையங்கள் இடுபொருட்கள் இதர சேகோ மற்றும் ஜவ்வரிசி தொழில் பொருட்கள், இடம்பெறும். எனவே இந்த தேசிய அளவிலான கருத்தரங்கில் அனைத்து விவசாயிகள் பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர், சேகோ ஜவ்வரிசி, மரவள்ளி தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்றும் மத்திய கிழங்கு பயிர்கள் ஆராய்ச்சி நிறுவன மூத்த விஞ்ஞானி Dr . து. ஜெகநாதன் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் S. இரமேஷ், ஏத்தாப்பூர் மரவள்ளி- ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய உதவிப் பேராசிரியர் Dr. M. வேல்முருகன், சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலைய வனவியல் உதவிப் பேராசிரியர் M. கிருபா, நாமக்கல் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் பரமசிவம், பாஜக அரசின் மத்திய நலத்திட்டங்கள் பிரிவு மாநிலத் துணைத் தலைவர் R. லோகேந்திரன், உழவர் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள், மாவட்ட விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.