கல்லூரி சந்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திறந்து வைப்பு
கல்லூரி சந்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திறந்து வைப்பு
நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை,தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்,மகளிர் திட்டம்ஆகியவற்றுடன் கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்திய கல்லூரி சந்தை கே எஸ் ஆர் கல்வி நிறுவன வளாகத்தில் உள்ள நிறுவனர் அரங்கில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் உமா கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். முன்னதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைபெண் குழந்தைகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும்மாவட்ட மகளிர் மையத்தின் பிரச்சார வாகனங்களை மாவட்ட ஆட்சியர் உமா கொடியசைத்து துவக்கி வைத்தார்.கல்லூரி சந்தை நிகழ்ச்சி சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட கடைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பார்வையிட்டார் நிகழ்ச்சியில் கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் சச்சின்,அட்மின் இயக்குனர் மோகன்,ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.