ஆண்டிபட்டியில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா
ஆண்டிபட்டி தெற்கு மண்டல் சார்பாக பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் சிறப்பு பூஜையும் செய்யப்பட்டது
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில், பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் ஆண்டிபட்டி தெற்கு மண்டல் சார்பாக வழிபாடு செய்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.ஆண்டிபட்டி தெற்கு மண்டல் தலைவர் வி பரமன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாநில மாவட்ட, நிர்வாகிகள் அணி மற்றும் பிரிவு தலைவர்கள் என பலர் கலந்து கொண்டு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்