100 நாள் வேலையாட்களை போட்டோ எடுத்த நபர் போலீசில் ஒப்படைப்பு
குமாரபாளையத்தில் 100 நாள் வேலையாட்களை போட்டோ எடுத்த நபர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் குளத்துக்காடு, பவர் ஹவுஸ் பின்புறம், வாசுகி நகர் பகுதியில், 100 நாள் வேலையாட்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். இவர்களை அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணி, 49, போட்டோ எடுத்துள்ளார். இதனைக்கண்ட பணியாட்கள் ஏன் போட்டோ எடுத்தாய் என்று கேட்க, அவர் அலட்சியமாகவும், தகாத வார்த்தை பேசியும் உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பணியாட்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அவரை போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.