100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து அமைச்சர் பொன்முடி தலைமையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

திமுகவினர் மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்;

Update: 2025-03-29 13:52 GMT
100 நாள் வேலை திட்டத்திற்கு  நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து அமைச்சர் பொன்முடி தலைமையில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
  • whatsapp icon
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்த லட்சக்கணக்கான பணியாளர்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மத்திய அரசு நிதி வழங்காமல் நிலுவையில் வைத்து காலம் தாழ்த்தி வருகிறது. மேலும் தமிழகத்திற்கு 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் வழங்கப்பட வேண்டிய நிலுவையில் உள்ள தொகை 4000 கோடிக்கும் மேல் உள்ளது. இந்த நிலையில் 100 நாள் வேலைத்திட்டத்தினால் பயன் அடைந்து வந்த முதியவர்கள் மற்றும் ஏழை எளிய குடும்பத்தைச் சார்ந்த பெண்கள் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று திமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு கிராமங்களில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி திமுக சார்பில் திருக்கோவிலூர் அடுத்த அருணாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும், வனத்துறை அமைச்சர்ருமான பொன்முடி கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷத்தை எழுப்பினார். மேலும், ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் மத்திய அரசு ஏழை எளிய குடும்பங்களை சார்ந்த மக்களை வஞ்சிப்பதாக குற்றம் சாட்டி கோஷங்களை எழுப்பினர்.இந்த நிகழ்வில் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Similar News