100 சதவிகிதம் உயர்கல்வியில் சேருவதை வலியுறுத்தி நடைபெற்ற மராத்தான் ஓட்டப்பந்தயத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்...*
100 சதவிகிதம் உயர்கல்வியில் சேருவதை வலியுறுத்தி நடைபெற்ற மராத்தான் ஓட்டப்பந்தயத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்...*;
விருதுநகரில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவிகள் 100 சதவிகிதம் உயர்கல்வியில் சேருவதை வலியுறுத்தி நடைபெற்ற மராத்தான் ஓட்டப்பந்தயத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்... விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் இன்று மாவட்ட நிர்வாகம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் 100 சதவிகிதம் உயர்கல்வியில் சேருவதை வலியுறுத்தியும் மேலும் ,உயர்கல்வி தொடர்வதன் மூலம் கிடைக்கும் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ,கல்லூரிக் கனவு என்ற தலைப்பில், நடைபெற்ற மராத்தான் ஓட்டப்பந்தயத்தில் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ, மாணவிகள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டப் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பெண்களுக்கு 10 கி.மீட்டரும் ஆண்களுக்கு 12 கி.மீட்டருக்கான ஒட்டப்பந்தயப் போட்டி நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பிரிவாக கலந்து கொண்டு முதல் ஐந்து இடங்களைப் பிடித்தவர்களுக்கு முதல் பரிசு ரூ 20000 , இரண்டாம் பரிசு ரூ 15000, மூன்றாம் பரிசு ரூ 10000 , நான்காம் பரிசு ரூ 7000, ஐந்தாம் பரிசு ரூ 5000 வழங்கப்பட்டன