பொள்ளாச்சியில் 100 ஏக்கரில் தென்னை தொழில் பேட்டை: முதல்வரிடம் மனு
பொள்ளாச்சியில் தென்னை நார் தொழிலை மேம்படுத்த 100 ஏக்கரில் தொழில் பேட்டை அமைக்க வேண்டும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தொழில் வர்த்தக சபையினர் கோரிக்கை மனு அளித்தனர்.
பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை சங்க தலைவர் G.D.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று திருப்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 12 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்..
அவர்களுடன் பேசிய முதலமைச்சர் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். இதனையடுத்து பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை சங்க கட்டிடத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது அப்போது பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி திமுக உறுப்பினர் ஈஸ்வரசாமி கலந்து கொண்டார் கோரிக்கையை மனுவை அவரிடமும் நிர்வாகிகள் வழங்கினார்.
முக்கியமாக பொள்ளாச்சி தென்னை மற்றும் தென்னை நார் தொழிற்சாலை நிறைந்த பகுதி என்பதால் தென்னை சார்ந்த 100 ஏக்கரில் தொழில்பேட்டை அமைக்க வேண்டும்,பொள்ளாச்சி தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்,ரயில்வே நிலையத்தை மேம்படுத்த வேண்டும், பொள்ளாச்சி ஏற்றுமதி நகரம் என்பதால் கண்டெய்னர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் மத்திய அரசு ஏற்றுமதி நகரமாக விருது வழங்கியிருந்தாலும்,
அதற்கான நிதி மத்திய அரசிடம் இருந்து வரவில்லை அந்த நிதியை பெற்று தர வேண்டும்உள்ளிட்ட 12 கோரிக்கைகள் வைக்கப்பட்டது மனுவை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் உடனடியாக இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததாக தொழில் வர்த்தக சபை தலைவர் GDகோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்..