100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

புதுக்கோட்டை அருகே கறம்பக்குடியில் இருசக்கர வாகனத்தில் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.2.54 லட்சம் மதிப்பிலான 100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குட்கா பொருட்களை விற்பனைக்காக எடுத்துச் சென்ற நபரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Update: 2024-01-14 01:26 GMT

 புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா, போதை, மாத்திரை போதை ஊசி, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், கள்ளச்சாராயம், கள்ளச் சந்தையில் மது விற்பனை, லாட்டரி விற்பனை உள்ளிட்ட சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து அவர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள வந்திதா பாண்டே உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்தந்த காவல் நிலையத்தில் பணிபுரியும் காவல்துறையினரும் அதே போல் தனிப்படை போலீசாரும் தொடர்ச்சியாக சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து கைது செய்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று கறம்பக்குடி காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி காவல் ஆய்வாளர் சாமிகண்ணு தலைமையிலான போலீசார் கறம்பக்குடி அருகே அம்புகோவில் முக்கத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் அதில் கறம்பக்குடி வடக்கு தெருவை சேர்ந்த ரஹமத்துல்லா(49) என்பவர் 2 லட்சத்து 54 ஆயிரத்து 400 ரூபாய் மதிப்புள்ள 100.384 கிலோ ஹான்ஸ், கூலிப் போன்ற புகையிலை பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து புகையிலை பொருட்களையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார் ரஹமத்துல்லாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News