100 கி.மீ நடைப்பயண விழிப்புணர்வு பேரணி

பெரியகுளம் பகுதியில் தேர்தல் விழிப்புணர்வுக்காக இரண்டாம் நாளாக மாவட்ட தேர்தல் அலுவலர் 100 கி.மீ நடைப்பயண பேரணி நடத்தினார்.

Update: 2024-04-08 14:53 GMT

பெரியகுளம் பகுதியில் தேர்தல் விழிப்புணர்வுக்காக இரண்டாம் நாளாக மாவட்ட தேர்தல் அலுவலர் 100 கி.மீ நடைப்பயண பேரணி நடத்தினார்.


33.தேனி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் 100% வாக்களிப்பை பதிவு செய்வதற்காக தொடர் விழிப்புணர்வு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 18 வயது நிரம்பிய வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வீதி நாடகம், உறுதிமொழி எற்பு, கிராமிய நடனம், விழிப்புணர்வு பேரணி, கையெழுத்து இயக்கம், காய்கறி மற்றும் பழங்கள் மூலம் விழிப்புணர்வு, ஏடிஎம் மையங்கள் மற்றும் அரசு பேருந்துகளில் ஒட்டுவில்லைகள் ஒட்டுதல் கடந்தமுறை வாக்குப்பதிவு குறைவான பகுதிகளை தேர்வு செய்து, வாக்களிக்க வேண்டி அழைப்பிதழ் வழங்குதல் போன்ற பல்வேறு விதமான தேர்தல் விழிப்புணர்வு பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு நாளும் 7 முதல் 10 கி.மீ வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நடைபயண பேரணி மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டு, முதல் நாளாக நேற்றைய தினம் தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதியில் 8 கி.மீ தூரம் விழிப்புணர்வு நடைபயண பேரணி நடைபெற்றது.

இரண்டாம் நாளாக இன்று பெரியகுளம் நகரப் பகுதியில் திருவள்ளுர் சிலை அருகில் தொடங்கி அழகர்சாமிபுரம், வடக்கு பாரஸ்ட்ரோடு, புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ஆடு பாலம், வடக்கு அக்கரஹாரம் வழியாக மீண்டும் திருவள்ளுர் சிலை வரை 7 கி.மீ தூரம் சென்று விழிப்புணர்வு நடைபயண பேரணி நடைபெற்றது. மூன்றாம் நாளாக நாளை உத்தமபாளையம் பேரூராட்சி அரசு மருத்துவமனையில் தொடங்கி, அம்மாபட்டி சாலை, தேரடி, பேருந்து நிலையம், பைபாஸ் வழியாக மீண்டும் அரசு மருத்துவமனை வரை 8 கி.மீ தூரம் சென்று நிறைவுறும் வகையில் விழிப்புணர்வு நடைபயண பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, போடிநாயக்கனூர் நகராட்சி பகுதி, ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதி, பழனிசெட்டிபட்டி பேரூராட்சி பகுதி, கூடலூர், சின்னமனூர், கம்பம் நகராட்சி பகுதிகளிலும், க.மயிலாடும்பாறை பகுதி என தொடர்ந்து 11 நாட்கள் நடைபயண பேரணி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. மேலும், இப்பேரணியில் அப்பகுதியில் உள்ள அலுவலர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு, தேனி மாவட்டத்தில் 100 % வாக்குப்பதிவை அடைவதற்கான உறுதிமொழியினையும், #நம் வாக்கு நம் உரிமை, வாருங்கள் வாக்களிப்போம்# என்ற கருப்பொருளை கொண்டு, அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.

Tags:    

Similar News