100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி இசை நிகழ்ச்சி !
சிவகங்கையில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி இசை நிகழ்ச்சி நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-04-04 08:37 GMT
100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி இசை நிகழ்ச்சி
சிவகங்கை மாவட்டம், பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024ஐ முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தமிழகத்திற்கு பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ ஒரே கட்டமாக தேர்தல் நடத்திடும் பொருட்டு, வருகின்ற ஏப்ரல்-19ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் பொதுமக்கள் 100 சதவீதம் தங்களது வாக்கினை பதிவு செய்திடும் பொருட்டு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்களர்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து, பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அரண்மனை வாசல் பகுதியில் உள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் கலை பண்பாட்டு துறை, மாவட்ட இசை பள்ளி சவகர் சிறுவர் மன்றம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் மூலம் 100% வாக்களிக்க வேண்டுமென வலியுறுத்தி இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு தங்கள் இசைக்குழுவின் மூலம் வாக்களிப்பதின் அவசியம் குறித்து எடுத்துரைத்தனர்.