100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி!
கரூரில் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.;
Update: 2024-03-23 05:39 GMT
கரூரில் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
விராலிமலை: கரூர் லோக்சபா தொகுதிக்கு உட் பட்ட விராலிமலை சட்டசபை தொகுதியில் வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சி நடந்தது. இலுப்பூர் ஆர்டிஓ தெய்வநாயகி தலைமை வகித்தார். விராலிமலை பஸ் நிலையம், சுப்ரமணிய சுவாமி கோயில் வளாகம், கடைத்தெரு, சோதனைச்சாவடி ஆகிய இடங்களில் நாட்டுப்புற கலைஞர்கள் பாடல்கள் மூலம் கலை நிகழ்ச்சி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வருவாய்த் துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.