சொட்டு நீர் பாசனத்திற்கு 100% மானியம் - தோட்டக்கலைத்துறை
அம்மாப்பேட்டை வட்டார விவசாயிகளுக்கு சொட்டு நீர் பாசனத்திற்கு 100% மானியம் வழங்கப்படுவதாக தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தெரிவித்தார்.
பாபநாசம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் (பொறுப்பு) சினேகப்ரியா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது அம்மாப்பேட்டை வட்டாரம் தோட்டக்கலைத்துறை மூலம் சொட்டு நீர் பாசனத்திற்கு மானியம் தரப்படுகிறது. பிரதம மந்திரியின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் சிறு குறு விவசாயிகளுக்கு 100% மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 செய்த மானியமும் தரப்படுகிறது. சொட்டுநீர் பாசன முறையானது பயிருக்கு தேவையான குறைவான வீதத்தில் நீண்ட நேரம் மண்ணின் தன்மைக்கேற்ப சொட்டுவான்கள் மூலம் நேரடியாக பயிரின் வேர்ப்பகுதிக்கு நாள்தோறும் செலுத்தும் முறையாகும் காய்கறி பயிர்கள் பழ பயிர்கள் மலைத்தோட்ட பயிர்களான ஆன தென்னை பாக்கு ஆகிய பல பயிர்களுக்கு சொட்டு நீர் பாசனத்தை பயன்படுத்தலாம்.
இம்முறையில் நீர் விரயம் முற்றிலுமாக தவிர்க்கப்படுகிறது பயிருக்கு தேவையான அளவில் தேவையான நேரத்தில் பாசன நீர் கிடைப்பதால் பயிர் நன்கு செழித்து வளர்ந்து நல்ல மகசூலை கொடுக்கிறது மேலும் மின்சக்தி பயன்பாட்டை குறைக்கலாம் நீர் பயன்படுத்திறன் 60 முதல் 80 சதவீதம் வரை அதிகரிக்கிறது பயிர் விளைச்சல் 20 முதல் 50 சதவீதம் வரை அதிகரிக்கப்படுகிறது பயிருக்கு தேவையான அளவில் உரங்களை பயிர் வளர்ச்சிக்கு ஏற்ப பாசன நீருடன் பகிர்ந்து அளிக்க முடிவதால் தரமான விளைபொருள் உற்பத்தி செய்ய முடிகிறது. களை வளர்வது கட்டுப்படுவதால் வேலையாட்கள் தேவை குறைவு.
இத்திட்டத்தில் இணைய ஆதார் நகல் குடும்ப அட்டை நகல் புகைப்படம் வங்கி கணக்கு புத்தகநகல் சிட்டா அடங்கள் நில வரைபடம் சிறு குறு விவசாய சான்றிதழ் மோட்டார் மின் இணைப்பு நகல் ஆகிய ஆகிய ஆவணங்கள் தேவையானதாகும் மேலும் விவரங்களுக்கு பாபநாசம் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது