100% வாக்களிப்பதை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்பு!
தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி உறுதிமொழி ஏற்க்கும் நிகழ்வு ஆட்சியர் தலைமையில் நடந்தது.;
Update: 2024-04-04 02:45 GMT
உறுதிமொழி
வேலூர் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமி முன்னிலையில் ஏலகிரி அரங்கில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் உறுதிமொழி வாசிக்க பொதுமக்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள், அதிகாரிகள் என அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மாலதி, மகளிர் திட்ட இயக்குனர் நாகராஜன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா மற்றும் மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.