1,000 கோடி என்பது தொடக்கம் தான்: தமிழிசை சவுந்தரராஜன்

டாஸ்மாக் ஊழல் தொடர்பாக பாஜக தலைமையில் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2025-03-17 05:39 GMT
1,000 கோடி என்பது தொடக்கம் தான்: தமிழிசை சவுந்தரராஜன்
  • whatsapp icon
டாஸ்மாக் ஊழல் தொடர்பாக பாஜக தலைமையில் இன்று போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி காலையில் சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த தீவிரம் காட்டி வந்த நிலையில் பாஜக தலைவர்கள் வீட்டின் முன்பு போலீசார் அனைவரும் குவித்து வைக்கப்பட்டிருந்தனர். ஏற்கனவே பாஜக தலைவர்களில் ஒருவரான வினோஜை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தனர். இந்நிலையில் சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் உள்ள தமிழிசை சவுந்தராஜன் வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் அவர் போராட்டத்துக்கு போக வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இதனைத்தொடர்ந்து முன்னெச்சரிக்கை காரணமாக அவரை போலீசார் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது, எந்த துறையில் இருந்தாலும் செந்தில்பாலாஜி ஊழல் செய்கிறார். மின்சாரத்துறையில் இருந்த போது அவர் ஊழல் செய்தார். போக்குவரத்து துறையில் இருந்த போதும் அவர் ஊழல் செய்தார். தற்போதும் அவர் ஊழல் செய்கிறார். 1000 கோடி என்பது தொடக்கம் தான். பல லட்சம் கோடி ஊழல் நடந்திருக்கிறது என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

Similar News