டெல்டாவிலிருந்து ஆத்தூருக்கு வந்த 1006 டன் நெல் மூட்டைகள்,

ஆத்தூர் இரயில் நிலையத்திற்கு டெல்டா விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட 1006 டன் நெல் மூட்டைகள் வந்தடைந்தது.

Update: 2023-10-20 03:14 GMT

கிடங்கிற்க்கு அனுப்பப்படும் நெல் மூட்டைகள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தஞ்சாவூர் , கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து தற்பொழுது தீவிரமாக நெல்லை அறுவடை செய்தனர். அறுவடை செய்யும் நெல்லை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை திறந்து விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் கும்பகோணம், திருவிடை மருதூர்,உள்ளிட்ட பகுதிகளில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை ரயில் மூலம் தஞ்சாவூரில் நெல் மூட்டைகள் சேலம் மாவட்டத்தில் உள்ள அரிசி அரவை ஆலைகளுக்கு கொண்டு செல்வதற்காக 21 இரயில்பெட்டிகள் மூலம் 1,006 டன் ( 25 ஆயிரம் ) நெல் மூட்டைகள் ஆத்தூர் இரயில் நிலையத்திற்கு வந்தடைந்தன. இந்த நெல் மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் 60க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் அரசு நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு ஏற்றினார்கள். பின்னர் இறக்குமதி செய்யப்பட்ட நெல் மூட்டைகளை ஆத்தூர், அயோத்தியபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 5 அரிசி அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அரிசியாக்கிய பின்னர் நியாய விலை கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்யப்படும்.


Tags:    

Similar News