கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் 1008 அகல்விளக்கு தீபம்
கீழப்பாவூா் நரசிம்ம பெருமாள் கோயிலில் மாா்கழி மாத சிறப்பு பூஜையொட்டி 1008 அகல் தீபங்களை பக்தர்கள் ஏற்றினர்.;
Update: 2024-01-02 03:11 GMT
அகல் விளக்கு
தென்காசி மாவட்டம், கீழப்பாவூா் நரசிம்ம பெருமாள் கோயிலில் மாா்கழி மாத சிறப்பு பூஜையொட்டி 1008 அகல் தீபம் ஏற்றப்பட்டது. இக்கோயிலில் மாா்கழி மாத சிறப்பு பூஜைகள் கடந்த டிச. 17ஆம்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் காலை 6 மணிக்கு ஸ்ரீராமநாம பஜனையுடன் திருக்கோயில் வெளிபிரகாரத்தில் (தெப்பக்குளம்) வலம் வருதல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதன்தொடா்ச்சியாக கோயிலின் வெளிபிரகாரத்தில் (தெப்பக்குளத்தை சுற்றிலும்) 1008 அகல் விளக்கு தீபம் ஏற்றப்பட்டது. தொடா்ந்து பெருமாள் சப்பரத்தில் வலம் வருதல், சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினா் செய்திருந்தனா்.