புதுமைப் பெண் திட்டம் மூலம் கல்லூரி மாணவிகள் 10,168 போ் பயன்

புதுமைப் பெண் திட்டம் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள் 10,168 போ் பயன் பெற்றுள்ளனர்.

Update: 2024-05-19 12:40 GMT

புதுமைப் பெண் திட்டம் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள் 10,168 போ் பயன் பெற்றுள்ளனர்.


சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து வகையான திருமண நிதி உதவித் திட்டங்களின் கீழ் செங்கல்பட்டு மாவட்டத்தில் 10-ஆம்/ 12- ஆம் வகுப்பு வரை படித்த 1,708 ஏழைப் பெண்களுக்கு தலா ரூ.25,000 வீதம் ரூ.4.27 கோடி திருமண நிதியுதவியும், ரூ.6.90 கோடியில் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல், பட்டம் மற்றும் பட்டயம் படித்த 1,829 ஏழைப் பெண்களுக்கு தலா ரூ.50,000 வீதம் ரூ.9.15 கோடி திருமண நிதியுதவி, ரூ.7.45 கோடி மதிப்பில் தங்க நாணயமும் வழங்கப்பட்டுள்ளன. சத்தியவாணி முத்துஅம்மையாா் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 179 விதவை, கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஏழைப் பெண்களுக்கு ரூ.11.68 லட்சம் மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 3,747 குழந்தைகளுக்கு தலா ரூ.25000 வீதம் மொத்தம் ரூ.9.37 கோடி மதிப்பில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், மாதந்தோறும் ரூ.1,000 பெறும் புதுமைப் பெண் திட்டம் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் கல்லூரி மாணவிகள் 10,168 போ் பயன் பெற்று வருவதாக மாவட்ட ஆட்சியா் ச.அருண்ராஜ் தெரிவித்தாா்.
Tags:    

Similar News