நாமக்கல் வெயில் சதம் தொ(சு)ட்டது

பொதுமக்கள் வெயில் காலத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். குறிப்பாக மதியம், 12:00 முதல், மாலை, 3:00 மணிவரை வெளியே செல்ல வேண்டாம்' என, மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உளது.

Update: 2024-04-03 02:46 GMT

தமிழ்நாட்டில் 14 இடங்களில் வெயில் சுட்டெரித்தது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஈரோட்டில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்து வருகின்றனர். கரூர் பரமத்தியில் 105 டிகிரி ஃபாரன்ஹீட், சேலம், வேலூர், தருமபுரியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் திருச்சி 103, கோவை, மதுரை விமான நிலையம், திருத்தணியில் 102 டிகிரி, நாமக்கல், திருப்பத்தூரில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், குழந்தைகள் முதல், முதியவர்கள் வரை அனைவரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தமிழகத்தில் கோடை காலம் துவங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெயில் அதிகரிக்க தொடங்கியது. மனித உடலின் சராசரி வெப்பநிலை, 36.1 டிகிரி செல்ஷியஸ் (97 டிகிரி பாரன்ஹீட்) முதல், 37.2 டிகிரி செல்ஷியஸ் (99 டிகிரி பாரன்ஹீட்) ஆகும்.

சுற்றுப்புற வெப்பநிலை சராசரி வெப்பநிலையைவிட அதிகரிக்கும்போது வியர்வை, தோலுக்கு அதிக ரத்த ஓட்டம் செல்லுதல் ஆகியவற்றின் மூலம் அதிகப்படியான வெப்பம் வெளியேறி, உடல் சராசரி வெப்பநிலையை தாண்டுகிறது.கோடை வெயிலால் அதிக வியர்வை வெளியேறும் போது, உப்புச்சத்து பற்றாக்குறையும், நீர்ச்சத்து பற்றாக்குறையும் ஏற்படுகின்றன. அதனால் அதிக தாகம், தலைவலி, உடல் சோர்வு, தலைச்சுற்றல், தசைப்பிடிப்பு, குறைந்தளவு சிறுநீர் வெளியேற்றம், மயக்கம், வலிப்பு போன்றவை ஏற்படலாம். நாமக்கல் மாவட்டத்தில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், குழந்தைகள் முதல், முதியவர்கள் வரை அனைவரும் கடும் அவதிப்படுகின்றனர். அதனால், வெளியே வர பயந்து, வீட்டுக்குள் முடங்கி உள்ளனர். வெயிலில் தாக்கத்தில் இருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்ள இளநீர், நுங்கு, தர்பூசணி, மோர், கம்மங்கூழ், கூல்டிரிங்ஸ், பழச்சாறு போன்ற பானங்களை அருந்தி வருகின்றனர்.

Tags:    

Similar News