மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு1031 வாக்கு இயந்திரங்கள் !

மயிலாடுதுறை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்புவதற்கான பணியை கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மகாபாரதி துவக்கி வைத்தார்.

Update: 2024-03-20 11:53 GMT

மயிலாடுதுறை தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்புவதற்கான பணியை கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான மகாபாரதி துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மக்களவை தொகுதி தேர்தலுக்காக மயிலாடுதுறை சித்தர்காடு பகுதியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கு வளாகத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் உள்ள மயிலாடுதுறை பூம்புகார், சீர்காழி சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பம் பணியை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான மகாபாரதி துவங்கி வைத்தார்.

சீர்காழி சட்டமன்ற தொகுதிக்கு 345 வாக்குப்பதிவு இயந்திரமும், 374 வாக்குப்பதிவினை உறுதிசெய்யும் இயந்திரமும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு 319 வாக்குப்பதிவு இயந்திரமும், 345 வாக்குப்பதிவினை உறுதிசெய்யும் இயந்திரமும், பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்கு 367 வாக்குப்பதிவு இயந்திரமும், 397 வாக்குப்பதிவினை உறுதிசெய்யும் இயந்திரமும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இதில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கீதா, கோட்டாட்சியர்கள் செல்வி.வ.யுரேகா, உ.அர்ச்சனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செல்வம் மற்றும் வட்டாட்சியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News