108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மதுரையில் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.;
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று (மே.17) மதியம் 3 மணியளவில் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் மதுரை டி எம் ராஜ்குமார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கோரி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய டியூட்டி ரோஸ்டரை முறையாக அமுல்படுத்தக்கோரி கோஷங்களை எழுப்பினார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கலந்து கொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினார்கள்.