108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்;

Update: 2025-09-13 03:21 GMT
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில், அகவிலைப்படி கூட இல்லாமல் 12 மணி நேரத்திற்கு மேல் தினமும் உழைக்கும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு 30 சதவீத ஊதிய உயர்வு வேண்டும், 16 சதவீத ஊதியத்தில் 10 சதவீதம் மட்டும் வழங்கி விட்டு 6 சதவீத ஊதியத்தை கொள்ளையடித்து வரும் தமிழக அரசு, தனியார் நிறுவனத்தையும் கண்டித்து கோசங்கள் எழுப்பப்பட்டன.

Similar News