108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜூன் 28ஆம் தேதி நேர்முகத் தேர்வு

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜூன் 28ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெறுகிறது.;

Update: 2025-06-26 03:39 GMT
அரியலூர் ஜூன்.26- 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜூன் 28ஆம் தேதி நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது இதுகுறித்து 108 ஆம்புலன்ஸ் சேவை மாவட்ட மேலாளர் குமரன் தெரிவித்துள்ளதாவது.108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 28ஆம் தேதி நேர்முகத் தேர்வு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. மருத்துவ உதவியாளருக்கான அடிப்படை தகுதிகள் :BSc. நர்சிங், அல்லது GNM, ANM, DMLT (12 ஆம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்). அல்லது Life Science Graduates (B.Sc. Zoology, Botany, Bio chemistry, Micro Biology, Biotechnology). வயது : 19 லிருந்து 30 குள் இருக்க வேண்டும். வேலை 12மணி நேரம் பகல் /இரவு பணியாக தமிழகத்தில் பணியமர்த்த படுவார்கள், ஊதியம் Rs.16990/- . மேற்குறிப்பிட்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், தங்களுடைய கல்வி, மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரிபார்ப்பதற்காக கொண்டு வரவேண்டும். ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனை வளாகத்தில் வரும் ஜூன் 28ஆம் தேதி நேர்முக தேர்வு நடைபெறும் மேலும் சந்தேகங்களுக்கு 8925941138, 7397724823, 7397724840 தொடர்புகொள்ளவும். இவ்வாறு மாவட்ட மேலாளர் குமரன் தெரிவித்துள்ளார். __________________________________________________________

Similar News